வாழ்க்கைப் பாதை
வாழ்க்கைப் பாதை
வாழ்க்கையின் பாதையை நிலத்தில் தேடினேன்
பாதைகள் பல; குழப்பியது
சாலையில் தேடினேன்
போக்குவரத்து நெரிசல்; நெருங்க முடியவில்லை
நீரில் நீச்சல் கற்றுத் தேடினேன்
பாறைகள் தான் இருந்ததே தவிர; பாதைகள் இல்லை
தீயில் தான் கிடைக்குமோ என எண்ணி செல்ல நேர்ந்தேன்; ஓசோ என்னும் கடவுளைக் கண்டேன்
பின்னரே அறிந்தேன்;
வாழ்க்கை தேடலுக்கானதல்ல, வாழ்வதற்கென்று!
