STORYMIRROR

Yazhini Mitoria

Drama Inspirational Children

5  

Yazhini Mitoria

Drama Inspirational Children

காப்பாத்து அப்பா!

காப்பாத்து அப்பா!

1 min
495

நீ பிறந்த நொடி, சூரியனும் மலை முகடுகளும் விளையாட! 


உன் மழைக்காட்டில் குடையாக அவர்கள் யார்? வானவில்லாய் நான்! 


உலக அதிசயங்களோ ஏழு, மகளே நீ எனக்கு முதல் அதிசயம்! 


கோடி பொருட்கள் வாங்கினேன், உன்னை வாங்க தான், கடவுள் கேட்டான் என் உயிரை! 


இன்றோ! என் வீட்டு அண்ணக்கிளி, அவன் வீட்டு பச்சைக்கிளியாய் நாளை கூண்டில்! 


அவன் வீட்டு சோலக் காட்டு பொம்மையாய் என் இளவரசி, இல்லத்தரசியாய்!


மழலையென பொம்மை கொண்டு விளையாட, அதில் அவள் ஜாடையில் ஒரு குழந்தை! 


விவரமறியா விலாசமாய் நீ, அதில் குடியேறியதோ பத்து விழுதுகள்! 


அல்லாஹ்வாக அல்ல; உன் அப்பனாய் அரவணைத்துக் காப்பேன்! 


இயேசுவாக அல்ல; உன் இறைத்தூதனாய் இருப்பேன்! 


சிவனாவாக அல்ல; சிறு துளி, பெரு வெள்ளமென பெருமையளிப்பேன்! 


மகளே! நீ கலங்காதே, உன் கண்ணீரே கங்கையாய்; என் சிரம் எட்டட்டும்!


உன் சிறைச் சாவியாய் தருகிறேன் அந்த அம்பேத்கரின் கனவுச் சட்டமும்! 


ஆடும் மயிலின் இறகிற்கீடாய் இன்பமும், குயிலிசையாய் ஊரறிய அறிவுக் குரலும்! 


 அந்த பாரதியின் ஆசியில் அறிவில் அரசனையும் விஞ்சிய ராஜகுருவாகவும்! 


 பெற்ற இன்பத்தைக் காட்டிலும், இன்றே சொர்க்கத்தைக் கண்ட மகிழ்ச்சியைத் தந்தாயே அவளே! என் மகள்.


Rate this content
Log in

Similar tamil poem from Drama