என்னுடைய நீ
என்னுடைய நீ
என்னுடைய பிறப்பு சிப்பிக்குள் நடந்தது,
அதன் அறிவு ஒளியின் சக்தியால் ரகசியம் ஒன்று சொன்னது,
அந்த ரகசியம் முழுவதும் கடலைச் சார்ந்ததே,
இந்த கனவோடு என்னை திறக்கும் அவனையும் கனவாய் கண்டேன்.
சிப்பி கடலைப் பற்றி மட்டுமே சொன்னது,
ஒரு வார்த்தைக் கூட அவனைப் பற்றி பேசவில்லை,
ஒரு நாள் என் கனவுக்கு முடிவு வந்தது,
கடலின் அழகை மட்டுமே எதிர் பார்த்த நான்.
அந்நேரத்தில் திடுக்கிட்டேன்,
ஏதோ ஒரு சக்தி என்னை தாக்கியது,
அவன் என்னை முக அடையாளம் கண்டான்,
இறுதியில் என்னை முத்தென கருதி மதிப்பளித்தான்.
என்னுடைய நீ,
என்னை மதிப்பளித்த உனக்கு என் காதல் நன்றிகள்!