வாழ்க தமிழர் திருநாள்!
வாழ்க தமிழர் திருநாள்!


கழனியெல்லாம் காய்ந்திருக்க!
உழவரெல்லாம் மழையை எதிர்பார்த்திருக்க!
எந்த எதிர்பார்ப்பும் இன்றி விண் கொடையாய்
வந்த மழையில் மண்ணை உழுது
மக்கிய சாணம் மற்றும் தழைசத்து உரமிட்டு
பக்குவமாய் பாத்தி கட்டி
விதை விதைத்து நாற்றாய் வளரச் செய்து
அதை எடுத்து வயலில் நட்டு
பூச்சி வராமல் இருக்க இயற்கை மருந்தாம்
ஆச்சி சொன்ன வேப்பெண்ணெய் தெளித்து
இரவு பகல் மின்சாரம் வரும் நேரம் பார்த்து
உறவு தனை வீட்டில் விட்டு நீர் பாய்ச்சி
வளர்த்த பயிரை அறுவடை செய்து
தளர்ந்த விவசாயிக்கு விலை வைக்க
இந்த ஊரில் உரிமை இல்லை
எந்த அரசு வந்து இதை சரி செய்யும்?
விளைவித்தவனே விலை சொல்லி
விற்கும் காலம் என்று வருமோ?
என்று விவசாயி எண்ணியிருக்கையில்
இன்று வந்தது தமிழர் திருநாள்.- உலகத்து உயிரின்
பசிக்குச் சோறு போடும் விவசாயியை
நசிக்காமல் விவசாயத்தைப் போற்றுவோம்!