வாசற்படியா
வாசற்படியா




அடி போடி!
என் இதயம் என்ன
வாசற்படியா நீ மிதித்து
ஏறிச் செல்வதற்கு?
வாசற்படிகளே இல்லாமல்
வீடுகள் இருப்பதற்கு காரணம்
உன்னைப் போன்றவர்கள் தானடி!
இதயத்தின் ஒவ்வொரு அறையாய்
நான் திறந்து வைத்தேன் உனக்காக!
ஆனாலும் உனக்கு ஏனோ
அத்தனை வெறுப்பு என் மீது...
உன் காதலின் அடியால்
காயம் பட்ட என் இதய வீட்டின்
வாசற்படிகளில் மறுபடியும்
நீ கால் பதிக்காதே
வடுக்களாய் மாறிய காயங்களுக்கு
மருந்திட நீ தேவையில்லை
வலியே எனக்கு மருந்தான போது
நீ வேண்டாம் எனக்கு
உன் வழியில் நீ செல்லடி!