உதயமாகும் வசந்த காலம்
உதயமாகும் வசந்த காலம்


காரிருள் மேகங்களும்
பனி சூழ்ந்த பொழுதுகளும்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகிச் செல்ல
வான் வீதியில்
நீலக் கம்பளம் விரிந்து கிடக்க
மேகத் தேர் ஏறியே
பவனி வருகிறார் -
ஆதவன் !
க்ரீச்சிட்டு புள்ளினமும்
சிறகடித்துப் பறக்க
கண்கவர் வண்ண மலர் தேடி
வண்டுகளும் தேனீக்களும்
படையெடுக்க - உற்சாகம் சுமந்து
உதயமாகிறது - வசந்த காலம் !