உடன்பிறப்பே!!!
உடன்பிறப்பே!!!
என்ன
தவம் செய்ததோ..
திருக்குவளை அஞ்சுகத்து
கருக்குவளை..
தாயறியாள் அன்று
தன்பிள்ளை அறுப்பான்
தமிழர்இருளை என்று..
பெற்ற அன்னையோ தன் தலைப்பால்
மறைத்து தாய்ப்பால் தந்தாள்.
வளர்த்த அன்னையோ நானிலம்
மயக்க தமிழ்ப்பால் தந்தாள்..
கதிரவன் உதிக்கும் முன்
தோன்றிடும் உனக்கு கருத்து..
காற்று உறங்கும் வேளையில்
காகிதம் நனைக்கும் உன்எழுத்து..
வைகறை எழுபவனுக்கு
நாள் இரண்டிற்கு சமம்.. உன் வாக்கு..
நான், நீ.. நீக்கி, நாம் என்று
சமத்துவம் சொன்னது.. உன் நாக்கு..
எட்ட இருந்து
உனை ரசித்தேன்..
அரசியல் அல்லாது.. தமிழ்க்கடலே..
நின் கரையைத்
தொடாது இங்கு
எந்தத் தோணியும் செல்லாது..
கலைஞர் பெருந்தகையே..
நான்ரசித்த குறுந்தொகையே..
உன்னை இழந்து,
தன்னொரு
பிள்ளை இழந்தாள், தமிழன்னை..
எப்படி மறப்பேன்
மஞ்சள் துண்டு, கண்ணாடி அணிந்து
சின்னம் விரித்துக் காட்டும் ஐ-விரலை..
இனி எப்போது கேட்பேன்
பலகோடித் தமிழரைக் கட்டிப்போடும்
உன் கம்பீரமான கரகர-க் குரலை..
மறக்க இயலாது நின் தமிழ்த் தொண்டு..
மறையாப் புகழ் என்றும் உனக்குண்டு..
#தமிழ் வெல்லும்