STORYMIRROR

Srisairam Rajasekar

Romance

4  

Srisairam Rajasekar

Romance

உஷ்ணமேனி

உஷ்ணமேனி

1 min
265

மேனி வாசம் சுண்டி இழுக்க,

என்னோடு நீ சேரும்

அழகுக்கு ஆசைப்பட்டு,

உன்னை கை பிடித்தேன்..

இரு விரல் பற்றி இழுத்து,

இச்சை தீர்க்க முற்பட்டு,

எச்சில் வறண்டதே மிச்சம்..

ஏக்கமுடன் என் பிள்ளை நோக்க,

ஏக்கமில்லா நீ பெற்றாய் கணக்கில்லா

முத்தங்கள்..

முதல் முத்தம் மூச்சை அடைத்து,

இருமல் எடுத்த அன்றே,

சகுனம் சரி இல்லை என

விட்டிருக்கலாம்..

விடவில்லை என் இளரத்த சூடு..

உஷ்ண மேனியே, உன்னை

புசிக்கும் ஆசையை..

என்னுள் கலந்தாய், இயக்கி ஆட்டி வைத்தாய்..

உன் வாசம் என் உடம்பில் வீச செய்தாய்

இறுதியில்,

உன்னை போல், என்னையும் கரைத்தாய்

இன்று, உடல் கருத்து உள்ளம் கருத்து,

கருஞ்சாம்பல் ஆக, உன்னை போல்

நானும் காத்திருக்கிறேன்..

வெண்சுருட்டே..



Rate this content
Log in

Similar tamil poem from Romance