முயற்சி
முயற்சி
முட்டுக்கட்டை முண்டியடித்து வருதே
முயற்சி செய்ய துடிக்கையிலே
அதிர்ஷ்ட தேவதை கடைக்கண் வீசாத
அற்ப பிறவி நானே
மனம் ஒன்று பிடிக்க
மூளை வேறு பிடிக்குதே
எதார்த்தம் பற்றி நினைக்கயிலே
பதார்த்த வாசனை வருகிறதே
அலை அலையாக யோசனையாக
நேரத்தை அரிக்கிறாயே மனமே!
ஐம்புலன்கள் அடக்கிட அனுதினமும்
நினைக்கிறேனே
மனமே உன்னை ஆள நித்தம் போர்
புரிகிறேனே..