கயல்விழி
கயல்விழி


இமைகள் படைத்த இறைவனே
இவளையும் ஏன் படைத்தாய்?
இவளை கணப்பொழுது பாராவிடினும்
துடிக்கிறதே மனம்..
ஆனாலும் சிமிட்டிடுதே கண்கள்..
அவைக்கு தான் புரிந்திடுமா
அகம் படும் பாடு
விழிகள் அது உறங்கினாலும்
விட்டுக்கொடுத்திடுமா மனம்
கயல்விழி அவளை நான் இரசிக்க
கயலாக பிறந்திருக்க ஆசை
அவை தாம் விழி மூடாமல்
அயர்ந்திடுமாம்..