தண்ணீர்
தண்ணீர்
தூய்மை என் அடையாளம்,
அழுக்கை அழிப்பவன் நான்,
என்னுள் அசுத்தம் கலக்கிறாயே..
நான் இல்லாமல் இருந்திடுவாயா?
இல்லை, என் கோரம் தான் தாங்குவாயா?
அமைதியாக செல்பவனை அணையிடாதே..
அடைத்தால் நான் அடங்கிடுவேனா?
சிறு விரிசலும் போதும்,
அழகாய் புகுந்திடுவேன்,
ஆக்ரோஷமாக பொங்கிடுவேன்..
அது மட்டுமா?
எத்திசையிலும் என் தேவை இருக்கும்
எதிலும் கலந்திடுவேன் நான்
என் தன்மை புரியாது உனக்கு
என்று சொன்ன தண்ணீருக்கு..
என் பதில்,
என் பிம்பம் உன்னில் பார்க்கிறேன்..