மழலைச்சிரிப்பு
மழலைச்சிரிப்பு
சமத்தான சுட்டிப்பிள்ளை
சிரிக்கும் சிரிப்பை பார்த்தாலே
சுற்றம் மறந்து கன்னம் கிள்ளி
சின்னதாய் ஒரு முத்தமிட்டு கொஞ்சிட
ஆசையிருந்தும்.. முன் பின் தெரியாத
குழந்தையென முன் சென்ற மனம்
பின் செல்ல கட்டாயமானது.
கள்ளம் இல்லாத அந்த கண்கள்,
கன நேரம் பார்த்தாலே மன கனம்
குறையும்.. கயவர்களுக்கு எப்படி தான்
காமம் வருகிறதோ!!!!
நினைத்தாலே அருவருப்பு மிஞ்சி
மிதித்து கொன்றிட கால் துடிக்கிறது..
அளவீடிருக்குமிடத்தில் நிலைகொள்ளாது அன்பு
அளவீடே அறியாத பிஞ்சு உள்ளத்திலும்
தொட்டுணர்தல் அளவீட்டை விதைக்கும்
கட்டாயம்.. காலக்கொடுமை.
இனியும் பெற்றவர் மற்றவரை நம்பி
பிள்ளையை கையில் கொடுப்பது சாத்தியமா?
சாவின் விளிம்பிற்கு மனிதம் முன்னேறி செல்கிறது,
மனதை நல்வழிப்படுத்துங்கள், மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறது.