சிதைத்த காதல்
சிதைத்த காதல்
சங்கிலி தொடராய் சர்வமும் அழிக்கிறதே
காதல் சிதைத்த மனது..
அணு சிதைவும் தோற்றிடும் போலே!
அன்னையா? இல்லை சுவை அரும்பா?
சுவைக்கவில்லையே சாதமும்…
யார் என்னை ஏமாற்றுவது?
கண்ணா? இல்லை கண்ணாடியா?
முன் போல் அழகாய் இல்லையே என் முகம்
துரோகம் செய்வது யாரோ?
மனமா? இல்லை மனிதரா?
எவரை கண்டாலும் கோபம் கொப்பளிக்கிறதே
யாரை நான் நம்புவது?
கால் குறுக கை குறுக
கண் சுருங்க மனம் உறங்க மறுக்கிறதே
நினைவுகள் விஷம் ஆகிறதே
படுக்கை விட்டு எழுகிறேன்
துவண்டு விழுகிறேன் தவழ்ந்து செல்கிறேன்
கட்டில் அடியில் மறைகிறேன்
மண் அடியிலும் மறைந்திடாமல் இருக்க
மன உறுதி வேண்டுகிறேன் என் இறைவனே ..
