மணநாள்
மணநாள்


கடிகார முள் பார்க்கவிடினும்
இதயம் ஒவ்வொரு நொடியும் கணக்கிடுதே
உன் வருகை எதிர்பார்த்தே
ஆயிரம் வசதி இருந்தும்
அசௌகரிய அரக்கி அலட்சியமாக
என்னை வாட்டி வதைக்கிறாளே…
பாவி.. காதலி.. அலங்காரம் வேண்டாமடி
அகத்தின் அழகே அற்புதமாய் உள்ளதடி என்பேனே..
முத்தம் முதல் மூச்சுக்காற்று வரை
இரசிக்கும் உனக்கு யாவும் அழகு தான்
ஆனால் ஊருக்கு அப்படி இல்லை என்றபடி அலங்காரிப்பாளே அவள்..
அழகுக்கு அழகூட்டும் அற்புதம் ஆகிய அக்காட்சியாவது பார்க்கலாம் என்றால் சம்பிரதாயம் தடுக்கிறதே..
மனமுடித்து வருடம் ஆகிவிட்டது ஆகினும் மணமுடிக்கும் வரை காத்திருக்கனுமாம்..
இன்னும் சில நாழிகைகள் தானே…
காத்திருப்பதும் சுகமாக தான் இருக்கிறது..