உணவுப்போர்
உணவுப்போர்


சுத்தமான உணவுக்காக
தெருத்தெருவாக
காய்கறிகள் வாங்க
ஊர்தியில் நானும்
செல்கையிலே முகமூடி
இல்லாமல் சிகரெட்
புகைக்கும் மக்கள்
கூட்டம் கண்டு
வியப்பாய் நானும் நிற்கையிலே
சொத்தென குப்பைகள்
தெருவில் வந்து வீழ்ந்தனவே!
உபயோகித்த முகமூடிகள்
என்னைப் பார்த்து பயங்காட்டிடவே
திரும்பும் தெருக்கள் யாவும்
தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்பு
பதாகைகள் தொங்கிடவே
கிடைத்த காய்கறிகளை
வாங்கி நானும் வந்திடவே
நெகிழி பையில்
ஊற்றிய சூடான சாம்பார்
என்னைப் பார்த்து சிரித்தனவே!
திருந்தாத மக்கள்
இவர்கள் மத்தியில்
என்று
கேட்டது!
பையில் இருந்த மஞ்சள்பொடியும்
வேப்பிலையும் எங்கள்
இந்தியரைக் காக்க
நாங்கள் தயார் என
மார் தட்டி கரோனா எதிர்ப்பு
போருக்கு கிளம்பின!