உணவு
உணவு
கால் துண்டு ரொட்டியாயினும்
நேர்மையான முறையில்
உழைத்து உண்பதால்
அவனுக்கு திருப்தியே
உணவு அத்தியாவசியம்
என்பதை மறந்து
ஆடம்பரத்திற்காக
உண்பவன் என்றும்
திருப்தி பெறுவதில்லை
கிடைக்கும் சிறிதளவையும்
பகிர்ந்து உண்கையில்
வரும் அலாதி சந்தோஷத்திற்கு
வேறு ஏதும் ஈடாகுமா என்ன
தானும் வாழ தன்னுடன் பிறரும்
வாழ வழி செய்வோம் நண்பர்களே!!
