உன்னால் உன்னில்
உன்னால் உன்னில்
பெண்ணே...
உன் உடையும் நடையும்
சொல்லி விடும்!
நீ யார்? என்பதற்கான விடையை!
நாகரீகம் எனும் போர்வையில்...
நங்கை உன் அழகினை...
திறந்து விடாதே!
கழுகுகள் வட்டமிடும் மறந்து விடாதே!
உடையால் உடலை மூடிக் கொள்
விடலையால் விலக்கி நடக்காதே!
வீணே புலம்பிக் கிடக்காதே!
பசித்தவன் பாதையிலே நடமாட
பசிக்கு நீயே இரையாகி....
சிறகொடிந்த பட்சியாய்
சுருண்டு மடியாதே!
நொந்து மனம் ஒடியாதே!
நெருப்பாய் கனன்று கொண்டிரு!
பொறுப்பில் உழன்று கொண்டிரு!
பொருப்பாய் உயர்ந்து கொண்டே இரு!
பெண்ணியத்தில் மதிப்புக் கொண்டிரு!
கண்ணியத்தை காத்துக் கொண்டிரு!
காலம் மாறினாலும்....
உன் கற்பை காத்து நில்!
உனைத் தீண்ட நினைத்தோர்....
தீயிலிட்ட புழுவாய் கருகி மடியட்டும்!
உலகம் உன்னால்.... உன்னில்...
நீ வளர்த்திடும் வித்துக்கள்....
நம் பாரம்பரியம் மாறாமல்
மண்ணில் மலரட்டும்!
மண்ணின் மணம் மாறாமல்....
வளர்ந்து செழிக்கட்டும்!
