உன் வாசனை
உன் வாசனை


காற்றின் அசைவினில்
உன் வாசம் அறிவேன்
எத்தனையோ மணித்துளிகளின்
தூரத்தினில் நீ இருந்தாலும்
உன் மணத்தினை அறிவேன்!
மனதின் அசைவுகளில்
உன் எண்ணத்தின் துகள்கள்
காற்றினில் கண்ணுக்குப் புலப்படாத
சின்னஞ்சிறு உணர்வுகளால்
மெல்ல மெல்ல படர்ந்து
என் நாசிகளில்
காதலின் சுவாசத்துடன்
மணம் நிறைந்த வாசமாய்
என்னை வந்தடையும்
மாயத்தினை என்னவென்று
நான் சொல்லுவேன்
சொற்களைத் தேடித் தவித்து
நிற்கும் என் நாவே!