உன் நினைவுகளுடன் நான்
உன் நினைவுகளுடன் நான்
நீ திறந்து வைத்த கண்கள் மூடிக்கொள்ள மறுக்கிறது;
நிலவின் ஒளியில் நாம் நடந்த பாதை இருண்டு போனது
தொலைந்த பிள்ளை போல தவிக்கிறேன் கண்ணீருடன்.
உணர்ச்சிகள் ஏதும் இல்லாமல் உறைந்து கிடந்தேன்
உன் விரல்கள் என் விரல்களை தீண்டும் வரை
நேற்று வரை தென்றலில் உறங்கி கிடந்தேன்,
உன்மீது என் ஆசை என்னும் புயல் தாக்கும் வரை
தரை தட்டிய படகாகிறேன்
நீ என்னை கட்டி இழுக்க மறந்தாயோ ;
கடல் அலையை போல எழும்பி வீழ்ந்து வந்தேன்
இருந்த போதும் நிலையாகி நின்றேன்
அன்பென்ற சிறு கல் கொண்டு எறிந்தாய்
கலங்கி நின்ற நீர் நிலையாகிறேன்
நீ வந்து சென்றாய்,பேசி சென்றாய்
கடந்து விட்டாய் என்னை நீங்கி...
உன் நினைவுகள் மட்டும் மையம் கொண்டது என் உள்ளத்தில்
சற்று விலகி சென்றால் தனி தீவு நான் ;
சிறகிழந்த பறவை போல துடிக்கிறேன்.
கடிகாரம் இரு முள் ஆகிறோம் ;
நீ நகர்கிறாய் நான் தொடர்கிறேன்.
ஒன்று சேர வாய்ப்பில்லை என்ற போதும்,
உன் நிழலாக இருப்பேன் இறுதி வரை !!!