உன் காதலால்
உன் காதலால்
இமைக்குள் நீ விழ
இமைக்க மறுத்த என் விழிகள்
உன் கனவுகளோடு நிரம்பி
என் பாதையை மறைக்கிறதே...
நெஞ்சம் முழுவதும் உன் தடங்கள்
பார்வை எங்கும் உன் படங்கள்
சாகாமல் சாகிறேன்
உன் மீதான பிரியத்தால்
கொல்லாமல் கொல்கிறாய்
என்னை தீண்டி மறையும்
உன் காதலால் ...

