தொட்டுவிடும் தூரம்தான்..
தொட்டுவிடும் தூரம்தான்..


முடியாதது ஏதுமல்ல
நீ தொடர்ந்து முயற்சித்தால்..
நிலவும் தொலைவல்ல
நீ தொட்டுவிடும் தூரம்தான்..!
இலக்கை மட்டுமே - உன்
விழிக்கு விளக்காக்கு..
விடா முயற்சியும்
இடையறா பயிற்சியும்
உன் மூச்சாக்கு..
இந்த இயற்கையே
துணை நிற்கும்
நீ இலக்கை அடைய..!
மலையென தடைவரினும்
மேகமென மறைந்திடும்..
உன் கையெறியும்
காகித ஏவுகணை கூட
காற்றின் துணையோடு
கரை சேரும்..!