தொலைந்து போனேன்....
தொலைந்து போனேன்....

1 min

392
உன் நினைவுகளின் பாதைகளில்
நான் இன்று
தொலைந்து போனேன்
வாழ்க்கையின் முள் நிறைந்த
பாதைகளில் தடுமாறி
நான் தவித்த போது
நீ எனக்கு ஒரு ஒளியானாய்.
சாலைகளின் சந்திப்பினில்
ஒளிரும் பச்சை வண்ண விளக்காக
என்னை வழி நடத்தினாய்
ஆனால் நீ இல்லாமல்
இன்று நான் மறுபடியும்
தொலைந்து போனேன்,
ஒளிர மறந்த சாலை விளக்குகள்
பகலையும் எனக்கு இரவாக்கியது.
கைக் கொடுத்து காப்பாற்றிட
என்று வருவாய் நீ எனக்காக?