STORYMIRROR

Pearly Catherine J

Abstract Inspirational Others

4  

Pearly Catherine J

Abstract Inspirational Others

தனிமை

தனிமை

1 min
437

தனிமையாக இங்கு யாரும் படைக்கபடவில்லை; 

தந்தையும் தாயும் உன்னைத் தனித்து விட்டாலும்;

தடுக்கி நீ விழுந்தால் உன்னைத் தூக்கி விடும் உறவு;

தந்தையாக தாயாக தம்பியாக தமக்கையாக தோழனாக தோழியாக துணைவியாக வரலாம்;

தவழ்ந்து நீ வரும் அழகைக் காண;

தத்தித் தத்தி நீ நடைப் பழகியதை காண;

தானாக நீ கடந்து செல்வதை காண;

திமிறி நீ திக்குமுக்காடி நின்றதைக் காண;

துன்பத்தில் துவண்டு போகாமல் நீ துணிவாக இருப்பதைக் காண;

தன்னம்பிக்கையோடு நீ தைரியமாக எதிர்கொள்வதைக் காண;

தடி ஊன்றி நீ தடுமாறி போவதைக் காண;

தனித்து விடப்படவில்லை நீ;

தளராதே திகைக்காதே தேவன் இருக்கிறான் உன்னோடு!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract