STORYMIRROR

Poet msasellah

Classics Fantasy

4  

Poet msasellah

Classics Fantasy

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு

1 min
365

தமிழ் புத்தாண்டு


தலைப்பு :: தமிழ் புத்தாண்டே""


பங்குனி நிலவே சித்திரை அழகே!!


தாலாட்டு மாறுமா தாயின் அரவணைப்பில்!!


என் தமிழ் புத்தாண்டு மாறுமா என் தமிழ் திருநாட்டில்!!


திகட்டுதே திருநாள் என் தமிழுக்கு சித்திரை முதல் நாளே !!


தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமுறைக்கும் தமிழ் நாளே !!


கவலைகள் மறந்து திண்டாட்டம் தமிழர் சித்திரை முதல் திருநாள் பெரும் கொண்டாட்டம் !!


அலங்கார தோரணை வரவேற்கும் ஊர் வீதிகள் வியக்க வைக்கும் !!


புத்தாடை புதுப்பிக்கும், புது வாசம் மெய்ப்பிக்கும் வீடு தோறும் !!


வாழையும் வானமும் போட்டி போடும் சித்திரையும் சித்திரம் பாடும் !!


கங்கையும் அமைதி காக்கும் இமயமும் எட்டிப் பார்க்கும் !!


வயல்வெளி நெல்லே சித்திரையில் அல்லே 


ஊர் மணக்க விருந்தோம்பல் உறவு மணக்க விருந்தோம்பல்!!


வீதி ஒன்றே வீதி உலா சித்திரை நாளே தமிழர் முதல் விழா !!


வீரமும் விஞ்ஞானமும் வியக்க விருந்தோம்பல் மயக்க!!


கலைகள் காலம் பாடும் தமிழர் நிலம் ஆளும் 


விழாவுக்கு எடுத்துக்காட்டு நாங்கள் உலக மக்கள் வாங்கல்!!


வாழவைத்து பார்ப்போமாடா 

வந்த வரையும் மீட்போமடா!!


அலங்கார தெய்வ வழிபாடு ஆரம்பிக்கும் உலகம் காண மெய்ப்பிக்கும் !!


எங்கள் பிறப்புக்கு ஓர் நிலை எங்கள் சித்திரை கலை!!


எங்கள் தமிழ் புத்தாண்டு நிலை 


"""" """"" """"" """""" """"""


பங்குனியை பார்த்தேன் பரவசமா உன் சித்திரத்தை சித்திரையில் விசித்திரமா!!


தமிழே தமிழே சித்திரைத் தமிழே

அமுதமழையில் பிறந்தாய் முதலே 


திகட்டுதே உயிரும் மெய்யும் ஆயுதமாக தமிழ் புத்தாண்டில் உலகம் எங்கும் !!!!!!!!!!


சித்திரையின் விழித்திரை தமிழரின் முகத்திரை!!


எங்கள் புத்தாண்டே தமிழ் புத்தாண்டே !!


முதலே உயிரே பிறந்தாய் சித்திரை நிலவே!!



நன்றிகளுடன் ...........



கவிஞர்,ம.செல்லமுத்து

 எம்.ஏ..பி.ஏட்...

நூத்தப்பூ ர் அஞ்சல் 

பெரம்பலூர் மாவட்டம் 









Rate this content
Log in

Similar tamil poem from Classics