STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

தமிழ் நாடு

தமிழ் நாடு

1 min
215


வள்ளுவனும் பாரதியும்

  வாழுகின்ற திருநாடாம்

தெள்ளமுத வார்த்தைகளைத்

  தேனினிலே தோய்த்தெடுத்து

துள்ளுகின்ற தமிழினிலே

  துடிப்படனே கவிபாடி

உள்ளம்கவர் கம்பனவன்

  உதித்ததிந்தத் திருநாடே!

தேனாகத் தமிழ்பேசும்

  திறனுள்ள மக்களிங்கு!

வானென்றும் பொய்க்காத

  வளமான பூமியிங்கு!

வீணான வாதங்களும்

  வெறும்பேச்சும் கிடையாது!

தூணாக நின்றிடுமே

  துணிவுடனே உலகிற்கு!

  




Rate this content
Log in

Similar tamil poem from Abstract