STORYMIRROR

நாஞ்சில் செல்வா

Abstract

5.0  

நாஞ்சில் செல்வா

Abstract

தலமைக்கு பிரியாவிடை

தலமைக்கு பிரியாவிடை

1 min
754



வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று....


ஒரு பயணத்தை இடை நிறுத்துவது போல..

ஒரு தீர்மானத்தை மாற்றிக்கொள்வது போல..

ஒரு விருப்பத்தை விட்டுக்கொடுப்பது போல..

ஒரு பதவி உயர்வு மறுக்கப்பட்டது போல ..


யாருக்கும்

அத்தனை எளிதல்ல... நேசித்த ஒரு தலைமைக்கு விடைக்கொடுப்பது....


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று....


இலக்கங்களை அடைய 

சொல்லாத பங்களிப்பை..

தூங்காத இரவுகளை...

சுயநலமில்லா ஓட்டங்களை...

எடுக்காத விடுமுறைகளை..

மனபூர்வமான முயற்சிகளை...


 யாருக்கும் எளிதல்ல 

தானே புரிந்து கொள்ளும் தலைமைக்கு விடைகொடுப்பது ....


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று....


இடிந்துரைப்பதும் ..கடிந்துரைப்பதும் கொண்டப்பொறுப்பாலெனினும்...

 எதற்கு சொன்னார்.. ஏன் சொன்னார்..

 என்ன செய்திருக்க வேண்டும்..ஏன் செய்திருக்க வேண்டும்....


யாருக்கும் எளிதல்ல 

கசப்பில்லாமல் கற்பித்த தலைமைக்கு விடைகொடுப்பது ....


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று....


ஒரு நன்றி...ஒரு வரி ஆமோதித்தல் 

ஒரு சிறு புன்னகை.. ஒரு தலை அசைவு...

ஒரு பாராட்டு...


யாருக்கும் எளிதல்ல 

அங்கீகாரம் கொடுக்க தவறா

 தலைமைக்கு விடைகொடுப்பது ....


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று....


முயற்சிகள் நடக்கும்...சிதறாத சிந்தனையிருக்கும்...வெற்றிமட்டுமே இலக்கு என்று தாங்கி நடப்பர் 


யாருக்கும் எளிதல்ல

அசைக்கமுடியா நம்பிக்கை வைத்த 

 தலைமைக்கு விடைகொடுப்பது


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று....


இப்படி செய்யலாம்...அப்படி செய்யலாம்... இதை செய்.. அதை செய்யாதே..இதை சொல் .இப்படிச் சொல்..

அங்கே கேள்...இங்கே தேடு....


யாருக்கும் எளிதல்ல 

பக்கபலமாய் நின்ற

 தலைமைக்கு விடைகொடுப்பது


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று.....

 

சொல்லாமல் விட்ட நன்றிகளை...

கூறாமல் விட்ட புரிதல்களை...

பகிராமல் விட்ட நிகழ்வுகளை...

ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆளுமையை.

வியப்பில் ஆழ்த்திய ஆற்றல்களை..

காட்டாமல் விட்ட அன்புகளை...

வெளிப்படுத்தாமல் விட்ட உணர்வுகளை...


இன்று மொத்தமாய்...முழுவதுமாய்....கொட்டி விடபோகிறோம்...


வேறென்ன சொல்லிவிடப்போகிறோம் இன்று.....

 

மீண்டும் ஒரு வெற்றி அணி அமையட்டும்...

பயணங்கள் எல்லாம் வெற்றியில் முடியட்டும்........

பிரபஞ்சம் போல் புகழ் பரந்து விரியட்டும்........

எங்கள் மனங்கள் அதைகண்டு பூரிக்கட்டும் இப்பொழுது போல் அப்பொழுதும்.......எப்பொழுதும்...


வாழ்த்துகள் 💐💐💐💐


Rate this content
Log in

Similar tamil poem from Abstract