தேநீர்
தேநீர்
ஒரு மழை சாரலை ரசிப்பதற்கு
ஒரு பதற்றத்தை குறைப்பதற்கு..
ஒரு சிந்தனை ஒட்டத்திற்க்கு ..
ஒரு சினத்தை தடுப்பதற்கு...
ஒரு மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு...
ஒரு கவலையை மறப்பதற்கு....
ஒரு ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு...
ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு...
ஒரு எரிச்சலை கட்டுபடுத்துவதற்கு...
ஒரு துரோகத்தை மறப்பதற்கு...
ஒரு தோல்வியை கடப்பதற்கு...
ஒரு வெற்றியைக் கொண்டாடுவதற்கு..
ஒரு முடிவை எடுப்பதற்கு...
ஒரு திட்டத்தை போடுவதற்கு
ஒரு மனப்போராட்டத்தை அமைதிபடுத்துவதற்கு....
நீ மட்டும்போதும்....
ஒரு கோப்பையில்..
தேநீராக !