தேநீர் நேரம்
தேநீர் நேரம்


இரு நண்பர்கள்
சிறிது களைப்பாற
தேநீர் பருகிக் கொண்டு
ஒரு பேச்சு வார்த்தை ........!!!
இன்று காலையில்
பார்த்த காட்சிகளை
வர்ணிக்க தொடங்கினான்....!!!
அதி காலை
சேவல் ராகம் பாட
புதிதாய் வந்த
பக்கத்து வீட்டிலிருந்து
காதோரமாய் ஒரு சத்தம்
சல சல என நீர் தெளித்து
மாவு கோலம் போட்டு
ஒத்த ஜடையில் பாவை
முத்து சலங்கையில்
நடந்து செல்ல
பெயர் தெரியா பறவை
நெஞ்சில் பல பெயர் ஓட
கண்களோ ஆவலாய் தேட
நண்பகல் நேரத்தில்
கதிரவனும் மங்கியே
அவள் முன் சுமாராக
பூசிய மஞ்சளும்
சூடிய மல்லிகையும்
இவன் மூக்கும் அடிமையாய்
பெயர் தெரியா பறவை
ஒரு தேடல் ......!!!
மீண்டும் நாளை
மற்றுமொரு
தேநீர் நேரத்தில் சந்திக்கலாம் ......!!!