தை மகளே வருக
தை மகளே வருக
தை மகளே வருக!
நெற்பயிர்களை அறுவடை செய்து
இல்லங்களையெல்லாம் தூய்மை செய்துவாயில்களில் எல்லாம் மாவிலைத் தோரணம் கட்டி மங்கையரெல்லாம் புத்தாடை ஆபரணம் சூட்டிவாசலில் எல்லாம் வண்ணக் கோலமிட்டு நிலைகளில் எல்லாம் மங்கலத் திலகமிட்டுபுதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டுபால் பொங்கி வர மகிழ்ச்சி நெஞ்சில் எழமஞ்சள் மணக்க மங்கலங்கள் ஜொலிக்க கரும்பு இனிக்க பொங்கலோ பொங்கல் ஒலிக்க...தீப ஆராதனைக் காட்டி...தை மகளே உன்னை மனமாற வரவேற்கிறோம்!தை மகளே வருக!வளத்தையெல்லாம் தருக!
