தாயுமானவன்
தாயுமானவன்
உதிரக்கூட்டில் இணைந்த பந்தமில்லையெனினும் உன் உயிராய் எண்ணி என்னை அவணைத்தாயே..
கண் காணாத அந்த தொலைவில் இருந்து கொண்டும் என் நலனை எண்ணி வருத்தம் கொண்டாயே..
ஒரு தாய் வயிற்றால் பிறக்காதிருத்தலால் மட்டும் நீ என்னது தமையனாகாது போய்விடுவாயா...
கடல் மலை தாண்டி விடுமோ நம் இருவரினிடையே உள்ள அன்பின் அளவை..
கணவாய் ஒரு உயிராய் என்னை நீ காணாத போதிலும் உன் உலகில் ஒரு உயிராய் பாவித்து பாசம் காட்டினாயே..
நீ கணவோ..
கண் காணா உறவோ..
உடனிருந்தும் இல்லாமல் என்னை என்றும் மகிழ வைக்கும் தாயுமானவனே...
- உன்னினிய தங்கை
