STORYMIRROR

தீரா தீ

Others

4  

தீரா தீ

Others

நட்பின் நினைவில்

நட்பின் நினைவில்

1 min
260


உன் சிரிப்பொலியில் மனதுள் புதைந்த

நம் அன்பு நினைவுகள் கனவாய் 

கண் முன் தோன்றுதடி.... 

அந்நினைவிலும் நாம் இருவரும் 

கரம் கோர்த்து மகிழ.... 

இப்போதோ... 

வெவ்வேறு திசையில்

மனதில் வலியுடன் 

ஒருவரை ஒருவர் பிரிந்திருக்கிறோம்...

நம் நட்பில் இந்த பிரிவு அவசியமா???

புன்னகை பூக்க வேண்டிய 

என் இதழ்கள் இன்று புன்னகைக்க மறக்குதடி.... 

வாழ்வில் விதையாய் வித்திட்ட 

நீ விருட்சமாய் வளர்ந்த 

இத்துனை வருடங்கள் பின்...

வேரோடு அருத்தெறிய கூறுவது 

எந்த விதத்தில் நியாயமடி.... 

நான் உன்னை காயப்படுத்தியதாய்

 

கூறி பிரிந்து சென்ற நீ... 

உண்மையில் காயப்பட்டது 

நான் 

என அறியவில்லையடி.... 

உன் அருகில் இருந்தும்... 

உன்னிடம் உறையாட முடியாமல் 

நான் படும் வேதனை 

என் மனம் ஒன்றே அறிந்ததடி... 

உயிர் தோழியாய் இருந்த நான் 

இன்று யாரோ என்ற பட்டத்துக்கு 

உரியவளாய் மாறியது 

நம் நட்பின் விதியா???

அல்ல 

என் விதியின் சதியா??

வாழ்வெங்கும் என்னை 

மறக்கமாட்டேன் என்ற

நீ...

என்னை பிரியும் தருணத்தில்

நம் அழகிய நினைவுகளை

மறந்தாயடி தோழி...


- கிருக்கியின் கிருக்கல்...


Rate this content
Log in