காதலே
காதலே


காதலுக்கு கடிதம்......
யார் நீ??
யாரால் நீ???
நீ உள்ளிருக்கும் மனம் நோக வைக்க வந்தாயோ???
காதல் சுகம் தர முளைத்தாயோ????
பாரமில்லா வாழ்வை காதலென்னும் வாகனமான உன் மீது ஏற்ற வாராயோ????
யாருமில்லா வாழ்வை அழகாக்க பூ வாகனமாய் வந்தாயோ???
விழி மொழியில் இதயத்தில் பூவாய் பாய்கிறாய்....
வாய் மொழியில் ஈட்டியை பாய வைக்கிறாய்....
வனம் எங்கிலும் பூ பூக்க.....
மனம் எங்கிலும் ரனம் காக்க....
உன் உண்மை நோக்கம் தான் என்னவோ???
காதலென்னும் நீ
ng> உயிர் நோகும் வலியா??? உயிர் வாழும் வழியா??? என்னித் தவிக்கிறேன் உன் புதிர்களிள்.... கண்ணீரின் சுவடை அழிக்கும் அமிர்தமானாய்.... அதே சமயம்.... அக்கண்ணீரை வரவைக்கும் ஆயுதமானாய்..... காதலானாய்..... காலமானாய்.... வாழ்வானாலும்.... சாவானாலும்....வலியானாலும்..... சுகமானாலும்..... புதிரானாலும்.....விடையானாலும்..... இதயத்தில் நுழைந்த உன்னுடன் அவனின் துடிப்பாய் துடித்து வாழ முடிவெடுத்துவிட்டேன் காதலே...... - கிருக்கியின் மனக்கிருக்கல்.....