STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

புதுமைப் பெண்

புதுமைப் பெண்

1 min
226

உனக்கான உண்மையான தடைகளையெல்லாம்!

உன் முயற்சியால் உடைத்தெறியத் துடிக்கும்!

உலகின் தவறுகளை மாற்ற நினைக்கும் என் அன்பிற்கு  இனியவளே!

உள்ளம் கவர்ந்த புதுமைப் பெண்ணே!


உள்ளத்தினை நிலையாக வைத்து!உனது ஆசையினை குறைவாக வைத்து!

உள்ளத்தினை உறுதியாக வைத்து!

உண்மையான அன்பைப் பிள்ளைப் பாசத்தில் வைத்து!

உன்னதமாக வாழும் புதுமைப் பெண்ணே!


உனது குழந்தைகள் உன்னை மறந்தாலும்!

உண்மையான நினைவுகள் எனும் பெருங்கடலில் நீ தவித்தாலும்!

உடனே கரை சேர இயலாமல் தவிக்கும் உலக வள்ளலே!

உனக்கெனக் கனவுகள் பல இருந்தாலும்!

உண்மை நிலையை எண்ணித் தவிக்கும்!

உள்ளம் வருந்தி வாடித் தவிக்கும் புதுமைப் பெண்ணே!


Rate this content
Log in

Similar tamil poem from Classics