புதியதோர் உலகம் படைக்க வேண்டும்
புதியதோர் உலகம் படைக்க வேண்டும்
அன்பும் பாசமும் நேசமும் மிகுதியாக உள்ள புதிய உலகம் படைக்க வேண்டும்!
சாதி மத பேதங்களைத் தவிர்த்து அனைவரும் சமத்துவம் என்கின்ற புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
சமூக நீதிக் கருத்துக்களைக் கொண்டு சாதாரணமான மக்களுக்கு அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
அனைவருக்கும் இலவச கல்வியையும் இலவச மருத்துவ வசதியையும் கிடைக்கச் செய்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் மாசுகளைத் தவிர்க்க அறிவியல் முறையில் மாற்று வழி கண்டுபிடித்து அதனை முறையாகச் செயல்படுத்தி புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
உலகெங்கிலும் உள்ள நெகிழிகளை மறு சுழற்சி செய்து பயனுள்ள பொருள்களாக மாற்றிப் புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
அனைத்து உலக மக்களிடமும் உண்மை பேசும் வழக்கத்தினை உருவாக்கிப் புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாகப் பல நல்ல நெறிகளைக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கிப் புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
ஆறுகளில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரினை அனைவருக்கும் பகிர்ந்தளித்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
விவசாயிக்கு எல்லாவிதமான விவசாய உதவிகளையும் அளித்து மழை பொழியும் விவரங்களையும் தெரிவித்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்திடப் பாடுபட்டுப் புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
உலக மக்கள் ஒவ்வொருவரும் அனைவரையும் மதித்து ஒற்றுமையாக வாழ்ந்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்திட வாழ்ந்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
உலக மக்களிடம் உள்ள தீய எண்ணங்கள் மாறி நல்ல எண்ணங்கள் உருவாகி புது வாழ்வு அடைந்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
இல்லங்கள் தோறும் இன்பமாக மாறிக் குற்றங்கள் இல்லாத சமுதாயத்தினை உருவாக்கி உலக மக்கள் என்றும் நலமுடன் வாழப் புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
கல்வியில் சிறந்த இளைஞர் குழுவினை உருவாக்கி உலக மக்களுக்குத் தொடர்ச்சியாகச் சேவை செய்து புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
இவை அனைத்தையும் நிறைவாகக் கிடைத்திட புதியதோர் உலகம் படைக்க வேண்டும்!
