பறவை ஒன்று கண்டேன்
பறவை ஒன்று கண்டேன்
அந்த பறவை போல ஒரு வியக்கும் உயிரை
நான் அன்று வரை பார்த்ததில்லை அப்படி
ஒரு அழகி சிறிய பறவையை!
தினமும் பார்க்க முடியுமா என்று
நான் ஏங்கி எதிர்பார்த்தேன் அந்த
ஒரு அழகி சிறிய பறவையை!
காலை பொழுது காற்று வேகமா வீச
சட்டென்று கண்டேன் அந்த
ஒரு அழகி சிறிய பறவையை!
நாட்கள் கடந்தன மாதங்கள் கடந்தன
கானல் நீர் போல அப்பறவையை நான்
வெகுகாலம் ஆனது இனி எப்போது காண்பேன்
என்னை வியப்புற்றிய அச்சிறிய பறவை..
ஒரு அதிகாலை பொழுது நான்
என் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் ஒரு
இனிமையான ரீங்காரத்தை கேட்டேன்
நான் பார்த்த பறவைகளில் அது
ஒரு அழகி சிறிய பறவை!
