STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

1 min
174

குறைவான வசதிகளுடன் இருப்பது அரசினர் பள்ளிக்கூடம்!

எளிய மக்களின் குழந்தைகளுக்கு அனைத்துக் கல்விக்கான உதவிகளையும் இலவசமாக அளிப்பது அரசினர் பள்ளிக்கூடம்! 

அதிகமான வசதிகளுடன் இருப்பது தனியார்ப் பள்ளிக்கூடம்!

வசதிப் படைத்த மக்களிடம் அதிக அளவுப் பள்ளிக் கட்டணம் பெற்று நடத்தப் படும் தனியார் பள்ளிக்கூடம் 

சிறிய குழந்தைகளின் கைவிரல் பிடித்து அ என்னும் முதல் தமிழ் எழுத்தினைச் சொல்லிக் கொடுக்கின்ற இடம் பள்ளிக்கூடம்! 

அதிக அளவு உலக அறிவினையும் ஆற்றலையும் அளிப்பது பள்ளிக்கூடம்! 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வியறிவுப் பெற்று வாழ்க்கையில் உயர்வுப் பெற அழைத்துச் செல்லுமிடம் பள்ளிக்கூடம்! 

குழந்தைகள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு செல்லுமிடம் பள்ளிக்கூடம்!

அறிவினை அறிமுகம் செய்யும் கோவிலாக இருப்பது பள்ளிக்கூடம்!

அன்பையும் பண்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம்!

நட்பின் உணர்வினை குழந்தைகளுக்கு உணரவைத்த இடம் பள்ளிக்கூடம்!

குழந்தைக்குள் மறைந்திருந்த திறமைகளை வெளி உலகிற்குத் தெரியப் படுத்திய இடம் பள்ளிக்கூடம்!

படிக்கும் மாணவர்களைத் தலை சிறந்த அறிவாளிகளாக மாற்றுத்திடம் பள்ளிக்கூடம்!

குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் அமைந்திருக்கும் இடம் பள்ளிக்கூடம்!

கோலாட்டத்தையும் கிராமியக் கலைகளையும் கற்றுக் கொடுத்த இடம் பள்ளிக்கூடம்!

அழகிய ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்த இடம் பள்ளிக்கூடம்!

தடகள விளையாட்டுகளை விளையாடிடக் கற்றுக் கொடுத்த இடம் பள்ளிக்கூடம்!

தமிழ் இலக்கிய இலக்கணப் பாடங்களைக் கற்றுக் கொடுத்து அவற்றின் இலக்கண அழகினை அறிந்திட வைத்த இடம் பள்ளிக்கூடம்!

உலக அளவில் உள்ள முக்கிய மொழியாகிய ஆங்கில அறிவினைக் கற்றுக் கொடுத்த இடம் இந்தப் பள்ளிக்கூடம்

கலைப் பிரிவு, அறிவியல் பிரிவு, தொழிற் பிரிவு போன்ற பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் இடம் பள்ளிக்கூடம்!

சாதி மத பேதமின்றி அனைவரும் சமமாக நடத்துத்திடம் பள்ளிக்கூடம்!

குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்வி கற்கச் செல்லுமிடம் பள்ளிக்கூடம்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics