பெண்
பெண்
1 min
23.6K
இறைவன் படைத்த அற்புதமான
படைப்புகளில் பெண்ணே
நீதான் உன்னதமானவள்!
உதட்டிற்கு சாயம்
இயற்கையாகவே கடவுள்
மாதுளை வண்ணத்தில்
அளித்திருக்க உனக்கெதற்கு
கண்மணி போலி சாயம்!
கருவண்டினை ஒத்த
கண்கள் மல்லிகை மலரினை
நோக்குவதுபோல
உனது கரிய விழிகள்
இருக்கும்போது உனக்கெதற்கு
செயற்கை அலங்காரம்!
தரைமீது நீ நோக்கி
நடக்கும்போது மட்டும்தான்
பெண்ணே நீ பாதுகாக்கப்படுவாய்!
உனது நேரிய பார்வை
நீ கற்ற கல்வி வெளிச்சத்தில்
புலப்படவேண்டுமே தவிர
உனது கண்ணாடி உடைகளில்
அல்ல!