பாட்டி
பாட்டி


செதில்களான சுருங்கிய கன்னத்துடன்
மங்கலான கண் சுருக்கத்துடன்
நெஞ்சுடன் அணைத்துக் கிடந்த
கருப்பு வெள்ளை புகைப்படங்கள்
காலஓட்டத்தின் அழியாத சின்னங்கள்!
கண்மை வழிய ஓமகுண்ட
திருமண வைபவத்தில்
பெற்றவன் மடியில் நான்!
இனித்திட்ட அக்கணத்தில்
ஊஞ்சலாடிய வைபவங்கள்
வாழ்ந்த வரலாறு சொல்லும்
பண்பாட்டு சின்னங்கள்!