STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

பாரதியார்

பாரதியார்

1 min
20

பாரதி யார்? யார் அந்த பாரதி?

பாரத்த்தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ்ப் புலவன்!

முத்துக் குளிக்கும் தூத்துக்குடியிலே….

ஓர் முத்தென உதித்தான் எட்டையபுரத்திலே!

ஊறங்கிக் கிடந்த மாந்தரையெல்லாம்…

ஓர் உதய சூரியனாய் எழுப்ப வந்தான்!

சுட்டும் விழிப் பார்வையாலே…

சுட்டெரித்தான் சாதிகளைத் தன் கவியாலே!

மனதில் சட்டென்று உதித்தவற்றை….

பட்டென்று உரைத்தவன் அவன்!

வாணிகத்தளம் அமைத்த வெள்ளையனை…

விரட்டி ஓடவிட்டான் தன் கவிதையினால்…

மங்கையர் தம் வாழ்வில் மறு வாழ்வு காணுதற்கு…

மங்காத ஒளி விளக்கை மனதார ஏற்றி வைத்தான்!

அண்டிக் கிடந்த மூடப் பழக்க வழக்கங்களை…

அரண்டு உருண்டோட அயராது உழைத்திட்டான்1

மழலைச் செல்வங்க்ளுக்கு மதிவுரைக் கூறுவதற்கு…

பாப்பா பாட்டினையே ஒரு பண்பாக பாடிவிட்டான்!

பார்வையில் புரட்சிக் கனல் பறக்கும்…

அவன் பாக்களில் புரட்சிக் கருத்துக்கள் மிதக்கும்!

பாரத சமுதாயத்திற்கு அவன் படைத்திட்ட…

சாதனைகள் பலப்பல!

புதுமைகள் படைக்க வந்த புரட்சிக் கவி…!

அவன் மகிமைகள் பல நடத்திய மகாகவி!

மூடர்களை ஒழித்திட்ட முண்டாசுக்கவி!

பாக்கள் பல படைத்து பாமரருக்கு அதையளித்து

உதவுவதை பொறுக்காத காலனவன் ….

கவியரசைப் பெற்றுக் கொண்டான்!

நம்மை விட்டு அவன் நீங்கினாலும்….

நமக்கு அவன் உரைத்தவை என்றும் …

நீங்காது நம் நினைவில் நின்றிருக்கும்!

வாழ்க பாரதி நாமம்! வளர்க நம் பாரதம்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational