பால்ய நினைவுகள்
பால்ய நினைவுகள்
நினைவுகளில் இருந்து விடுபடுவது ஒன்றும் எளிதானதல்ல...... துன்பம் தராத கடந்த கால நிகழ்வுகளிலிருந்து ....
ஆற்றில் இறங்க பயந்து நடுங்கி ..கரையிலேயே குளித்த பால்ய விடுமுறை நாட்கள்....
நீச்சல் கற்க முயன்று...அலறி பயந்த நாட்கள்.............
வடு மீது கொத்திய மீன் கண்டு பயந்து அழுத போது. அள்ளி அணைத்து மீன் கொததியதும் மருந்து என்று சொன்ன தாத்தா.....
ஆற்றைப்பார்க்கும் போதெல்லாம்...
ஒவ்வொருமுறையும்...
கண்ணில் படுவது தண்ணீர் மட்டுமல்ல....
நினைவிலே தங்கிப் போன தாத்தாவும்..
அங்கொன்றும் இங்கொன்றுமாய்...
பால்யம் விட்டுச்சென்ற நினைவுகளும்...