ஓம் சாந்தி!
ஓம் சாந்தி!
என்றும் எப்பொழுதும் நல்ல நாளாகட்டும்
என்றும் எப்போதும் அமைதி நிலவட்டும்
என்றும் எங்கும் நிறைவே நிறைந்திருக்கட்டும்
என்றும் எதிலும் நல் ஆசிர்வாதம் தங்கட்டும்
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!
என்றும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்
என்றும் எல்லோரும் நோய்களின்றி வாழட்டும்
என்றும் எல்லோருக்கும் நல்ல நேரமாகட்டும்
என்றும் யாவரையும் கெட்ட சக்திகள் அணுகாதிருக்கட்டும்
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!