ஒன்று கலந்திடு
ஒன்று கலந்திடு
ஒரு கூட்டுக்குள் இருந்து விடினும்...
கருத்துகள் வேறாயின்...
ஒட்டாத உள்ளங்களாய்...
எட்டியே இருந்து விடும்!
அழுத்தம் கொடுத்து விடின்....
கூ(வீ)டு உடைந்து விடும்!
சூடு உயர்த்தி விடின் ...
உள்ளம் இறுகி கல்லாக மாறி விடும் !
உள்ளங்கள் ஒன்று கலந்துவிடின்...
வாரிசு ஒன்றை தந்து விடும்!
கூடு உடைந்திடினும்...
குருவி வெளியே வந்து விடும்!
சுற்றம் பார்த்து மகிழ்ந்து விடும்!
ஒன்று கலந்து வாழ்ந்திடுவோம்!!
இந்த ஒரு கூட்டு உள்ளம் போல!
