நட்பு
நட்பு
அன்பை அளிப்பது…
ஆபத்தில் உதவுவது….
இன்பத்தை வழங்குவது…
ஈந்து மகிழ்வது….
உற்சாகம் தருவது….
ஊக்கம் கொடுப்பது….
எப்போதும் உடன் இருப்பது….
ஏற்றத் தாழ்வுகள் இல்லாதது….
ஐயத்தை நீக்குவது….
ஒற்றுமையை வளர்ப்பது…
ஓங்கித் தழைப்பது…
அகிலத்தில் சிறந்தது…
அழுகையில் ஆறுதலையும்….
தோல்வியில் தேறுதலையும்….
வெற்றியில் மகிழ்வையும்…
ஆனந்தத்தில் ஆர்ப்பரிப்பையும் தந்து…
நிழலாய் தொடர்ந்து… நீக்கமற நிற்பது!
நட்பு…. நடிப்பன்று! நாடித்துடிப்பு!
ஓப்புக்கு கூடுவதன்று!
உவப்புடன் கூடுவது!