நட்பெனும் நல்லுறவு
நட்பெனும் நல்லுறவு
உடன்பிறவா உறவொன்று
உள்ளத்தில் ஊஞ்சலாடும்..
இன்பமோ, துன்பமோ
இரண்டையுமே பங்குபோடும்..
உடையையும் உணவையும்
பேதமின்றி பகிர்ந்துகொள்ளும்..
தங்களுக்குள் தலையிட
பெற்றோர்க்கும் தடைபோடும்..
முதுமையிலும் இளமையாக
இதயத்துள் உணரவைக்கும்..
நோய்வரும் நேரத்திலெல்லாம்
தாய்போல அரவணைக்கும்
உரிமையோடு தவறுகளை
புரியும்படி தட்டிகேட்கும்..
ரகசியமும் சுயநலமும்
என்றுமே தோற்றுப்போகும்..
உலகிலே உயரிய உன்னத
உறவான நட்பினிடம்..
இரா.பெரியசாமி
