நட்பென்னும் உன்னதம்
நட்பென்னும் உன்னதம்
நட்பென்னும் உன்னதமது
கையில் தவழும் நேரமெல்லாம்
பொக்கிஷமாய் பலவற்றையே
நெஞ்சாங் கூட்டில் சேமித்தே
நலமாய் கடக்கிறது காலமுமே !
காலம் பல கடக்க -
கோலமதுவும் மாற -
உள்ளத்து உறையும் நட்பு மட்டும் -
புத்தம்புது சுகந்தமாய்
எந்நாளும் மனமெங்கும் மணம் வீசியே
புத்துணர்வை புதுப்பித்துக் கொண்டே
வாழ்க்கை ஓட்டத்தை இலகுவாக்குகிறது !