நடக்க, நடக்க
நடக்க, நடக்க


மாலைத் தென்றலில் சீராய்
படபடக்க நெற்றியைத் தழுவிடும்
கருமைநீறக் கூந்தலின்
மெல்லிய ஓசையினில்
நம்மை மறந்து பேசித் தீர்த்த
காலங்கள் மறுபடியும் வருமா?
நம் கைகளுக்குள்
காதல் உலகினை உணர்ந்த
அந்த நொடிகள் மீண்டும் வருமா?
வாழ்க்கையின் மேடு பள்ளங்களில்
நம்மைத் தொலைத்திட்ட பொழுதுகளை
மீண்டும் பெற்றிட
மறுபடியும் நடப்போமா
ஒரு காதல் நடை!