நன்றி மறவாத தனயன்
நன்றி மறவாத தனயன்
மரம் பூமித் தாயின் மீது கொண்ட காதலால்...
தன் வித்தை மெல்ல அவள்
அகப்பையினுள் அனுப்ப....
அவள் அதை நாளும் பொழுதும்
கருத்தாய் சுமந்து....
கருவை உரு ஆக்குகிறாள்!
அழகிய உருவைப் பிரசவித்த
பூமித்தாய்...
வேரெனும் தொப்புள் கொடியால் அவ்வுயிருக்கு உணவூட்டுகிறாள்!
வளர்ந்த அப்பிள்ளை...
தன் இலையையும் தழையையும் கொட்டி..
அத்தாய்க்கு வளம் சேர்க்கிறான்!
தாகம் கொண்டு நாவறண்ட போது....
மழை நீரை தெளித்து அவளின்
தாகம் தணிக்கிறான்!
வெள்ளமென்னும் துன்பம் வந்த போதும்...
தன் வேர்க்கரங்களால் அவளைப் பற்றிக் காத்து நிற்கிறான்!
தான் மரணிக்கும் தருணத்திலும் அவள் மடி மீதே உயிர் துறக்கிறான்!
