STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

4  

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

நிறமேதடி

நிறமேதடி

1 min
168

நிறமேதடி...

என் கண்மணியே...


உன் கருங்குழலில்

என் முகத்தை புதைக்க

உன்னில் போதையில்லாது

மயங்கி போனவன் நானடி

என் இனிய கீதமே...


உன்‌ வில் வளைவு

கரும் புருவங்கள்

எனை அம்பாக தாக்குதடி

என் உயிர்அமுதே...


உன் கருவிழிகள்

எனை இமைக்காமல் காண

என்னுள் பூகம்பம் தோன்றுதடி 

என் கவிமொழியே...


கருமை நிறம் உன் மெய்யை

அலங்கரிக்க உனக்கேனடி கவலை...

வெண்மை அழகுயில்லையடி....

உன் காதல் கொண்ட மனமது 

மட்டுமே அழகடி பெண்ணவளே...


நீ என் கருப்பழகியடி....

உன் மென்னகைக்கும் 

கன்னங்களின் குழிதனில் 

என்றைக்கும் எழாமல்

விழுந்து கிடப்பவன் நானடி...


என்னவள் நீயடி...

உன்னவன் நானடி...

இதில் நிறமெங்கு 

வந்தது சொல்லடி

என் கண்மணியே....



Rate this content
Log in

Similar tamil poem from Abstract