நினைக்கும் நொடிகள் போதவில்லை
நினைக்கும் நொடிகள் போதவில்லை


நான் கண்டகனவுகளிலில் உயிருடன் உருவம் கொண்டு என்னை நேசிக்க பிறந்தவன் நீ...
காதலின் தோற்றம் காற்றை போல் என்னை அடித்து தள்ளிகொண்டே போகிறது எங்கு செல்கிறேனோ தெரியவில்லை..
பச்சை மரபூக்களாய் என்மேல் உதிர்ந்து என்னை தீண்டி செல்கிறாய்..நகரும் நொடிகளும் தெரியவில்லை..
பேசும் வார்த்தைகள் கடல் கடந்து சென்றாலும் நேரம் போதவில்லை..
இனி ஒரு ஜென்மம் வேண்டும் உன்னை இரசித்து கொண்டே புன்சிரிப்போடு உன்னை கட்டி அணைக்க..
காலம் நேரம் தெரியவில்லை இரு விழிகளும் மூடவில்லை உன் கை விரல்கள் பிடித்து நடக்க கைகள் தட்டி தவிக்கின்றது..