நிலா வெளிச்சம்....
நிலா வெளிச்சம்....
குளிர்ந்த ஒளி கீற்றுகளால்
தண்ணீரின் அலைகளில்
பிம்பமாய் ஒரு கவிதை
உன் முகத்தினை
எனக்கு நினைவூட்டிட -
சட்டென்று மாலைக் காற்றினில்
கலைந்தோடிடும் மேகமாய்
என் மனசின் எண்ணங்கள்
சலனமில்லா நீரின் பரப்பினில்
ஏனோ இன்று சலனமுற்று
வேதனையுடன் பயணிக்கின்றதேன்?
நீயில்லாத பொழுதுகளில்
சலசலக்கும் நினைவென்னும்
ஆர்ப்பாரிக்கும் அருவியினில்
ஏனோ சிறு ஓடையாய்
கசிந்திடும் கண்ணீர் துளிகள்!
